பொது செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி காலமானார்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை: உடல்நல குறைவால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி, 87, காலமானார்.சமூக ஆர்வலர், செயல்பாட்டாளரான, 'டிராபிக்' ராமசாமி, வெள்ளை சட்டை, காக்கி கலர் பேன்ட் உடன், உயர் நீதிமன்றத்தை வலம் வருவார். கையில் வழக்கு கட்டு, சட்டை பாக்கெட்டில் பேப்பர் கட்டு இருக்கும். பொது நல வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்தவர்.
 சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி காலமானார்

சென்னை: உடல்நல குறைவால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி, 87, காலமானார்.

சமூக ஆர்வலர், செயல்பாட்டாளரான, 'டிராபிக்' ராமசாமி, வெள்ளை சட்டை, காக்கி கலர் பேன்ட் உடன், உயர் நீதிமன்றத்தை வலம் வருவார். கையில் வழக்கு கட்டு, சட்டை பாக்கெட்டில் பேப்பர் கட்டு இருக்கும். பொது நல வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்தவர். சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்னை ஆனாலும், நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காணுவதில், ஆர்வம் உடையவர்.

தன் வழக்கில், தானே ஆஜராகி வாதாடுவார். ஆங்கிலத்திலும் அருமையாகவாதாடுவார். கொரோனா காலத்திலும், ஆன்லைனில் ஆஜராகி உள்ளார்.வயது மூப்பு காரணமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தி.நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே, தேவையான சிகிச்சை மேற்கொண்டார்.கடந்த மாதம், 20ம் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்த நிலையில், காலமானார்.இதையடுத்து, அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று காலை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில், இறுதி சடங்கு நடக்கும் என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ராமசாமி தொடுத்த வழக்குகள்

* மோட்டார் பொருத்திய மீன்பாடி வாகனங்கள் இயக்கப்படுவதை எதிர்த்து, வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றார்

* சென்னையில் விதிமுறைகளை மீறி, கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க கோரி வழக்கு தொடுத்தார்

*பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமிக்கும் கடைகளை அகற்ற கோரி வழக்கு தொடுத்து, சாதக உத்தரவு பெற்றார்

* விதிமுறைகளை மீறி, 'பேனர்'கள் வைக்கப்படுவதை எதிர்த்து, வழக்கு தொடுத்தார். எங்கு பேனரை பார்த்தாலும், நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்

* மெரினாவில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்தும் வழக்கு தொடுத்தார்

* நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களை அகற்ற வழக்கு தொடர்ந்தார்

* மாநகராட்சியில் துப்புரவு பணிக்காக, போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல், 'பேட்டரி' வாகனங்கள் இயக்குவதை எதிர்த்து வழக்கு போட்டார்

* சென்னை, ஜார்ஜ் டவுனில் இயங்கி வந்த இரும்பு கடைகளை, சாத்தன்காடு பகுதிக்கு மாற்ற வழக்கு தொடுத்தார்

* பாரிமுனையில் சட்டவிரோதமாக பட்டாசு கடைகள் நடத்த தடை கோரி வழக்கு போட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X