பொது செய்தி

தமிழ்நாடு

செய்யூரில் அ.தி.மு.க., தோல்வி நிர்வாகிகள் உள்ளடி காரணம்?

Added : மே 04, 2021
Share
Advertisement
செய்யூர் தனித்தொகுதி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கணிதாசம்பத் தோல்விக்கு, கட்சி நிர்வாகிகள் உள்ளடி காரணம் என, அக்கட்சியினர் கூறினர். செய்யூர் - தனி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட, செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.ராஜு, திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ., தனபால், மாவட்ட மருத்துவ அணி செயலர் டாக்டர் பிரவீன்குமார் உள்ளிட்டோர், தலைமையிடம் விருப்பம்

செய்யூர் தனித்தொகுதி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கணிதாசம்பத் தோல்விக்கு, கட்சி நிர்வாகிகள் உள்ளடி காரணம் என, அக்கட்சியினர் கூறினர்.

செய்யூர் - தனி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட, செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.ராஜு, திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ., தனபால், மாவட்ட மருத்துவ அணி செயலர் டாக்டர் பிரவீன்குமார் உள்ளிட்டோர், தலைமையிடம் விருப்பம் தெரிவித்தனர். மதுராந்தகம் தனித்தொகுதியில் போட்டியிட, கணிதாசம்பத் விருப்ப மனு அளித்தார். ஆனால், கட்சித் தலைமை, மதுராந்தகத்தை மறுத்து, செய்யூரை வழங்கியது. எனினும், தொகுதியில் வெற்றி பெற, தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க., ஓட்டுகளை கவர, அக்கட்சி நிர்வாகிகளையும் சரிகட்டினார்.

ஆனால், தேர்தல் முடிவில், செய்யூரில் போட்டியிட்ட தி.மு.க., கூட்டணி, வி.சி., வேட்பாளர் பனையூர் எம்.பாபுவிடம், 4,042 ஓட்டுகள் வித்தியாசத்தில், கணிதாசம்பத் தோற்றார்.ஓட்டு எண்ணிக்கையில், 2, 3, 5, 8 ஆகிய சுற்றுகளில் மட்டுமே, இவர் முன்னிலை வகித்தார். ஒன்பதாம் சுற்று துவங்கி, இறுதிச்சுற்று, 24 வரை, வி.சி., வேட்பாளரே முன்னிலை பெற்று, கணிதாசம்பத் தோல்வியுற்றார்.இவர் தோற்றது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.ம.மு.க., கூட்டணி, தே.மு.தி.க., வேட்பாளர் ஏ.சிவா, 3,054 ஓட்டுகளை பெற்றார். அ.ம.மு.க., ஓட்டுகள் பிரிந்ததால், இவர் தோற்றதாக கருத முடியாது. செய்யூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட முயன்ற சிலரின் உள்ளடியால், கணிதாசம்பத் தோற்றார்.காரணம், கணிதா, ஏற்கனவே இருமுறை, எம்.எல்.ஏ., பதவி வகித்தவர். தற்போது, மூன்றாம் முறையாக வென்று, அ.தி.மு.க., ஆட்சியும் அமைந்தால், அமைச்சராகும் வாய்ப்பு இருந்தது.இதனால், தங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என கருதி, முக்கிய நிர்வாகிகளே, வி.சி.,க்கு சாதகமாக செயல்பட்டு, இவரை தோற்கடித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X