பிள்ளையார்பாளையம் தெருவில் வெள்ளம்போல் ஓடிய குடிநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார்பாளையம் தெருவில் வெள்ளம்போல் ஓடிய குடிநீர்

Added : மே 04, 2021
Share
காஞ்சிபுரம் : பிள்ளையார்பாளையம் பகுதியில், 'ஏர் வால்வு' உடைந்து வெளியேறிய குடிநீர், வெள்ளம்போல் தெருக்களில் ஓடியது.காஞ்சிபுரத்தில், பெரிய காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, குடிநீர் எடுத்து வரப்படுகிறது. அந்த தண்ணீர், காஞ்சிபுரம் அடுத்த சாலபோகம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் தேக்கி, அங்கிருந்து பெரிய

காஞ்சிபுரம் : பிள்ளையார்பாளையம் பகுதியில், 'ஏர் வால்வு' உடைந்து வெளியேறிய குடிநீர், வெள்ளம்போல் தெருக்களில் ஓடியது.காஞ்சிபுரத்தில், பெரிய காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, குடிநீர் எடுத்து வரப்படுகிறது.

அந்த தண்ணீர், காஞ்சிபுரம் அடுத்த சாலபோகம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் தேக்கி, அங்கிருந்து பெரிய காஞ்சிபுரம் பகுதிக்கு, பிள்ளையார்பாளையம் வழியாக செல்கிறது.இதில், பிள்ளையார்பாளையம் நடுத்தெருவில் உள்ள குழாய், நேற்று முன்தினம் உடைந்து, தண்ணீர் வெளியேறியது. தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள், உடைந்த பகுதியை சீரமைக்க, சாலை நடுவில் பள்ளம் தோண்டினர். அப்போது, ஜே.சி.பி., இயந்திரத்தால், குழாயின் ஏர் வால்வு உடைந்து, ஏராளமான தண்ணீர் வெளியேறியது.இரவு, 8:00 மணியில் இருந்து, விடிய விடிய தண்ணீர் வெளியேறியதால், தெருக்களில் வெள்ளம் போல் குடிநீர் ஓடியது.

சில வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் உள்ள நிலையில், விடிய விடிய ஓடிய தண்ணீரை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குடிநீர் குழாய் பழுதை சீரமைக்க பணி நடந்து வருகிறது. இன்று - நேற்று - இரவுக்குள் பணி முடிந்து விடும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X