பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, காலமானார்.தேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர்.லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக பாடுபட்டு

சென்னை:மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, காலமானார்.

தேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர்.லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக பாடுபட்டு வந்தார்.

இவர், சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தன் மகள் நளினி வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், காலமானார்.அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில், இன்று மதியம், 1:30 மணிக்கு எரியூட்டப்படுகிறது. அவரது மனைவி சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டார். மாலினி, நளினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-மே-202101:18:36 IST Report Abuse
தமிழவேல் ஓம்ஷாந்தி.. படம் ஒன்று இணைத்திருக்கலாம். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X