அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொந்த கட்சியினரின் சதி வலையில் சிக்கி படுதோல்வியை சந்தித்த பாண்டியராஜன்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆவடி : சொந்த கட்சியினரால், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் முதல் முறையாக, சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்து உள்ளார். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், 2011ல், விருதுநகர் சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். 2016ல் ஆவடி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடந்த, 10 ஆண்டுகள், அரசியலில்

ஆவடி : சொந்த கட்சியினரால், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் முதல் முறையாக, சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், 2011ல், விருதுநகர் சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். 2016ல் ஆவடி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடந்த, 10 ஆண்டுகள், அரசியலில் வெற்றிகரமான மனிதராக வலம் வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 55 ஆயிரத்து, 275 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க.,வின் சா.மு.நாசரிடம் தோல்வியுற்றார்.ஆவடி தொகுதியில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், அதிக வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தியது; ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டதில், பாண்டியராஜனுக்கு முக்கிய பங்குண்டு.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஜெயலலிதா கைகாட்டிய வேட்பாளர் என, ஆவடி அ.தி.மு.க.,வினர் பாண்டியராஜனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி செயல்பட்டனர். ஆனால், இம்முறை அது நடக்கவில்லை. அ.தி.மு.க.,வில் பாண்டியராஜனின், 'என்ட்ரி', ஆவடி தொகுதியின் முதல் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் என கட்சியில் வளர்ந்து வந்த, அப்துல் ரஹீமின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக, அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால், கட்சிக்காரர்கள் மத்தியிலேயே பாண்டியராஜனுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பாண்டியராஜனுக்கு எதிராக செயல்பட துணிந்த கட்சிக்காரர்கள் சிலர், தேர்தலுக்கு முன், தி.மு.க., பிரமுகர்களிடம் பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், நடந்து முடிந்த தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் பாண்டியராஜன், படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளார் என, தோல்விக்கான காரணம் குறித்து, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X