பொது செய்தி

தமிழ்நாடு

கத்திரி முதல் நாளில் பல இடங்களில் மழை

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:கத்திரி வெயிலின் துவக்க நாளான நேற்று, மூன்று இடங்களில் மட்டும் வெயில் சதம் அடித்தது. பல இடங்களில், வெப்பச்சலன மழை பெய்தது.நேற்று மாலை நிலவரப்படி, திருச்சி, மதுரை மற்றும் வேலுாரில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மற்ற இடங்களில் மிதமான கோடை வெயில் நிலவியது.கொடைக்கானல், 19; குன்னுார், 22; ஊட்டி, 23; துாத்துக்குடி, 33; கன்னியாகுமரி, நாகை,

சென்னை:கத்திரி வெயிலின் துவக்க நாளான நேற்று, மூன்று இடங்களில் மட்டும் வெயில் சதம் அடித்தது. பல இடங்களில், வெப்பச்சலன மழை பெய்தது.நேற்று மாலை நிலவரப்படி, திருச்சி, மதுரை மற்றும் வேலுாரில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மற்ற இடங்களில் மிதமான கோடை வெயில் நிலவியது.

கொடைக்கானல், 19; குன்னுார், 22; ஊட்டி, 23; துாத்துக்குடி, 33; கன்னியாகுமரி, நாகை, பாம்பன், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, 34; சென்னை, கோவை, தர்மபுரி, சேலம், காரைக்கால், 35; கடலுார், பாளையங்கோட்டை, தொண்டி, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.

அதேபோல, தென்காசி, அதிராம்பட்டினம், கரூர் பரமத்தி, மதுரை, பாம்பன், திருச்சி, தொண்டி, வால்பாறை ஆகிய ஊர்களை ஒட்டிய சில இடங்களில், நேற்று வெப்பச்சலன மழை பெய்தது. கேரளா வரையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 7ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கொடுமுடி, உத்தமபாளையத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X