பொது செய்தி

தமிழ்நாடு

அணுசக்தி துறை தொழில்நுட்பம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : அணுசக்தி துறை, மின்கடத்துதிறன் மீட்டர் தொழில்நுட்ப சாதன ஒப்பந்த உரிமத்தை, பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. அணுசக்தி துறை, இந்திரா அணு ஆராய்ச்சி மையம், முக்கிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, காப்புரிமை பெற்றுள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களை, பொது பயன்பாட்டிற்காக, பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க, கல்பாக்கம் - அணுபுரம் பகுதி யில்,

மாமல்லபுரம் : அணுசக்தி துறை, மின்கடத்துதிறன் மீட்டர் தொழில்நுட்ப சாதன ஒப்பந்த உரிமத்தை, பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது.

அணுசக்தி துறை, இந்திரா அணு ஆராய்ச்சி மையம், முக்கிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, காப்புரிமை பெற்றுள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களை, பொது பயன்பாட்டிற்காக, பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க, கல்பாக்கம் - அணுபுரம் பகுதி யில், 'இன்குபேஷன்' மையம், கடந்த ஆண்டு அக்., முதல் இயங்குகிறது.இந்திரா அணு ஆராய்ச்சி மைய 'எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன்' குழுமம், 'ஆத்ம நிர்பர் பாரத்' திட்டத்தின்கீழ், துடிப்புடனான உணர்திறன் அடிப்படையில், மின்கடத்துதிறன் மீட்டர் சாதனம் கண்டறிந்து, செயல்திறன் பரிசோதித்து, வெற்றி கண்டது.

இச்சாதனம், பகுப்பாய்வு மற்றும் தர கட்டுப்பாட்டு வேதியியல் ஆய்வகங்கள், நீர்நிலைக் கரைசல் மின்கடத்து திறன் ஆய்வு தொழில்துறைகளில் பயன்படும்.இதற்கான உரிம ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை, இந்திரா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர், அருண்குமார் பாதுரி, பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு, இணையவழி சந்திப்பில் வழங்கினார்.அணு ஆராய்ச்சி மைய, பாதுகாப்பு, தரம், ஆராய்ச்சி மேலாண்மை குழு இயக்குனர், பி.வெங்கட்ராமன், இ.ஐ.ஜி., இயக்குனர், எஸ்.ரகுபதி, இன்குபேஷன் மைய தலைவர், என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X