அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்டிமென்டில் சிக்கிய அ.தி.மு.க., நட்ராஜ்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : மயிலாப்பூர், சென்னையின் மிகப் பழமையான தொகுதி, 1952ம் ஆண்டில் இருந்தே தேர்தலை சந்தித்து வருகிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்திருந்திருந்த, 1989 தேர்தல் மற்றும் 1996ல் ஜெ., அரசு மீதான அதிருப்தி காரணமாக, இந்த தொகுதியில் தி.மு.க., இருமுறை வென்றது. 2001ல் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜ., வேட்பாளர், கே.என். லட்சுமணன் வென்றார்.அதை தொடர்ந்து, 2006ல்

சென்னை : மயிலாப்பூர், சென்னையின் மிகப் பழமையான தொகுதி, 1952ம் ஆண்டில் இருந்தே தேர்தலை சந்தித்து வருகிறது.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்திருந்திருந்த, 1989 தேர்தல் மற்றும் 1996ல் ஜெ., அரசு மீதான அதிருப்தி காரணமாக, இந்த தொகுதியில் தி.மு.க., இருமுறை வென்றது. 2001ல் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜ., வேட்பாளர், கே.என். லட்சுமணன் வென்றார்.அதை தொடர்ந்து, 2006ல் அ.தி.மு.க., சார்பில், நடிகர் எஸ்.வி. சேகர், வெற்றி பெற்றார். 2011ல் அ.தி.மு.க., சார்பில் ராஜலட்மி, காங்., சார்பில் அதன் மாநில தலைவர், தங்கபாலு போட்டியிட்டனர். ராஜலட்சுமி வென்றார்.

2016 ல் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் டிஜிபி., நட்ராஜ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அ.தி.மு.க., இந்த தொகுதியில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.நடந்து முடிந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், நட்ராஜ் மீண்டும் களமிறங்கினார். தி.மு.க., சார்பில் சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வேலு, ம.நீ.ம., சார்பில், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.கடந்த, 2016ல், மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக, ஜெயலலிதாவால் நேரடியாக களம் இறக்கப்பட்டார்.இதனால், கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும், சுறுசுறுப்பாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு, இவரை வெற்றி பெற வைத்தனர்.இந்த முறை, மயிலாப்பூர் பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், ஓட்டு சேகரிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், கூட்டணி கட்சியான, பா.ஜ., வின் மயிலாப்பூர் பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் அருகில் உள்ள, ஆயிரம் விளக்கு தொகுதியில், நடிகை குஷ்புக்காக ஓட்டு சேகரிக்க சென்றுவிட்டனர். அதே போல் பா.ம.க., நிர்வாகிகள், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அதன் கட்சி சார்பில் போட்டியிட்ட, கசாலிக்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட சென்று விட்டனர்.எனினும், வழக்கமான அரசியவாதிகளைப் போல் அல்லாமல், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடாதவர், தொகுதி நிதியை முழுவதும் செலவழித்து நலத்திட்டங்களை செயல்படுத்தியவர், படித்தவர், முன்னாள் போலீஸ் அதிகாரி என, பல வகையிலும், நட்ராஜ் சிறந்த வேட்பாளராக பார்க்கப்பட்டார். எனவே, இயல்பாகவே, அ.தி.மு.க., கோட்டையாக விளங்கிய மயிலாப்பூரில், நட்ராஜ் எளிதாக வெற்றி பெறுவார் என, அந்தக் கட்சியினர் கணக்கிட்டனர்.ஆனால், மயிலாப்பூர் தொகுதியில் உள்ள குடிசைப்பகுதி ஓட்டுகள், மீனவர்களின் ஓட்டுகள், ஜாதி கணக்கீட்டுக்கு அப்பாற்பட்ட ஓட்டுகள், தி.மு.க., வேட்பாளர் வேலுவின் வெற்றிக்கு வித்திட்டன. ஓட்டு எண்ணிக்கையின் போது, இரு வேட்பாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். எனினும், இறுதியில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் வேலு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், 25 ஆண்டுகளுக்கு பின், மயிலை தொகுதி தி.மு.க., வசம் வந்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் பகுதி ஓட்டுக்கள், அ.தி.மு.க., வுக்கு சாதகமாகவும், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நந்தனம், பட்டினப்பாக்கம் பகுதி ஓட்டுக்கள் மற்றும் பரவலாக உள்ள குடிசைப் பகுதி ஓட்டுக்கள், தி.மு.க.,வுக்கு சாதகமாகவும் பதிவாகின. மயிலாப்பூர் தொகுதியில், 32 ஆண்டுகளில், ஒரு முறை நின்று வெற்றி பெற்ற வேட்பாளர், மீண்டும் வெற்றி பெற்றதில்லை என்ற, 'சென்டிமென்ட்' மீண்டும் வேலை செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X