பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த ஏரி ஷட்டரை சீரமைத்த விவசாயிகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஏரியின், பழுதடைந்த மதகின் ஷட்டரை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகளே சீரமைக்க முயன்றதைஅடுத்து, பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, மூன்று கலங்கல், 18 மதகுகளுடன், 5,636 ஏக்கர் பாசன பரப்பளவும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடையது.இந்த ஏரி நீரை நம்பி, 18

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஏரியின், பழுதடைந்த மதகின் ஷட்டரை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகளே சீரமைக்க முயன்றதைஅடுத்து, பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, மூன்று கலங்கல், 18 மதகுகளுடன், 5,636 ஏக்கர் பாசன பரப்பளவும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடையது.இந்த ஏரி நீரை நம்பி, 18 கிராமங்களைச் சேர்ந்த, 5,462 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு பெய்த பருவ மழைக்கு, ஏரி முழுமையாக நிரம்பியது.உத்திரமேரூர் ஏரி தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள், முதல் போகம், நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர்.

தற்போது, இரண்டாவது போகத்திற்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், எட்டாம் எண் மதகின் ஷட்டர் திறக்க முடியாததால், நீரடி, பட்டஞ்சேரி, நல்லுார், வாடாநல்லுார் உள்ளிட்ட கிராம விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து, பொதுப்பணித் துறையினரிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், விவசாயிகளே, பழுதடைந்த மதகின் ஷட்டரை சீரமைக்க முயன்றனர். அதன்பின், பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து, விவசாயிகளுடன் இணைந்து, பழுதடைந்த ஷட்டரை தற்காலிகமாக சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X