பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Added : மே 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : ஊராட்சி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், பெருநகர் ஊராட்சியில், நேற்று நடந்தது. உத்திரமேரூர் ஒன்றி யத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, பேரூராட்சி, வருவாய், போலீஸ், தீயணைப்பு என, முன்கள பணியாளர் களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.தற்போது, ஒன்றியத்தில் உள்ள, 73 ஊராட்சிகளில் பணிபுரியும்,

உத்திரமேரூர் : ஊராட்சி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், பெருநகர் ஊராட்சியில், நேற்று நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றி யத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, பேரூராட்சி, வருவாய், போலீஸ், தீயணைப்பு என, முன்கள பணியாளர் களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.தற்போது, ஒன்றியத்தில் உள்ள, 73 ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சி செயலர், துாய்மை பணியாளர், துாய்மை காவலர், அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர், சமையலர்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பெருநகர் ஊராட்சியில், நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்தார்.இதில், ஊராட்சி, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் என, 15 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.மானாம்பதி கண்டிகையில் நடந்த மருத்துவ பரிசோதனை முகாமில், 120 பேரிடமிருந்துசளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X