புழல் சுற்றுவட்டாரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புழல் சுற்றுவட்டாரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை

Added : மே 04, 2021
Share
புழல் : அறிவிக்கப்படாத மின் தடையால், புழல் சுற்று வட்டாரங்களில் வசிப்போர் அவதிப்படுகின்றனர். சென்னை, புழல் அடுத்த விநாயகபுரம், பத்மாவதி நகர், புத்தகரம் சுற்றுவட்டாரங்களில், சில தினங்களாக, அறிவிக்கப்படாத மின் தடை நீடிக்கிறது. இதனால், தினமும், பகல், இரவு நேரத்தில், இரண்டு மணி நேரம், மின்சார வசதியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர்.மின் தடை எப்போது சீராகும் என, புழல்

புழல் : அறிவிக்கப்படாத மின் தடையால், புழல் சுற்று வட்டாரங்களில் வசிப்போர் அவதிப்படுகின்றனர்.

சென்னை, புழல் அடுத்த விநாயகபுரம், பத்மாவதி நகர், புத்தகரம் சுற்றுவட்டாரங்களில், சில தினங்களாக, அறிவிக்கப்படாத மின் தடை நீடிக்கிறது. இதனால், தினமும், பகல், இரவு நேரத்தில், இரண்டு மணி நேரம், மின்சார வசதியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர்.மின் தடை எப்போது சீராகும் என, புழல் மற்றும் புத்தகரம் கடப்பா சாலை மின் வாரிய அலுவலகங்களில், பொதுமக்கள் விசாரித்தால், 'மின் இணைப்பில் சிறு கோளாறு, சீரமைப்பு பணிகள் நடக்கின்றன' எனக் கூறி, அதிகாரிகள் நழுவி விடுகின்றனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேற்கண்ட பகுதிகளில், மின் வடங்களை, பூமிக்கு அடியில் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவையும் மந்த கதியில் நடப்பதால், அதற்காக, சாலைகளில் தோண்டப்பட்டு, மூடாத பள்ளங்களால், வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படும், நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X