அவமதிப்பு வழக்கு தொடரலாமா: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'டில்லிக்கு தினந்தோறும், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்ற, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மத்திய அரசின் மீது, ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.டில்லியில், கொரோனா இரண்டாம் அலையின் வேகம், தீவிரமாக உள்ளது. மருத்துவ மனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் பலியாயினர். இதனால், 'டில்லிக்கு தினந்தோறும்,

புதுடில்லி:'டில்லிக்கு தினந்தோறும், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்ற, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மத்திய அரசின் மீது, ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டில்லியில், கொரோனா இரண்டாம் அலையின் வேகம், தீவிரமாக உள்ளது. மருத்துவ மனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் பலியாயினர். இதனால், 'டில்லிக்கு தினந்தோறும், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஆனால், தினமும், 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, டில்லியில் உள்ள மருத்துவமனைகளில், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்துவதற்கான, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என, மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மத்திய அரசின் மீது, ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என, கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:ஆக்சிஜன் பற்றாக்குறையால், மருத்துவமனைகள் படுக்கை களை குறைத்துள்ளன. இதனால், ஐ.சி.யு., மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், தினந்தோறும் மக்கள் அவதிப்படுவதை பார்க்கிறோம்.கண் முன், கொரோனாவால் மக்கள் செத்து விழுவதை பார்க்கிறோம். இதை, நீங்கள் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கலாம்; நாங்கள் அப்படி இருக்க முடியாது.

டில்லிக்கு தினமும், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; 490 மெட்ரிக் டன் அல்ல. காரணங்கள் எதுவாக இருப்பினும், தினமும், 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என, நாங்களும் கூறுகிறோம்.இதுதொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசின் மூத்த உயர் அதிகாரிகள் இருவர், இன்று நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202101:33:38 IST Report Abuse
தமிழவேல் எல்லாமே இருப்பு இருக்கு, எதுவும் தட்டுப்பாடு இல்லேன்னு சொல்லுறவனுவோ. அப்போ, சப்லை பண்ண வேண்டியதுதானே ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202101:31:10 IST Report Abuse
தமிழவேல் நீங்க எதுவேனும்னாலும் சொல்லலாம். அவனுவோ உப்பு போட்டு சாப்பிடறதில்ல மைலார்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X