பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்'பில் மளிகை பொருட்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வீட்டில் இருந்தபடியே, மளிகை பொருட்களை, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் 'ஆர்டர்' செய்தால், காஞ்சிபுரத்தில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளில், 'டோர் டெலிவரி' செய்யும் சேவை துவக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று, கடந்தாண்டு பரவ துவங்கியதும், கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதனால், வீட்டை விட்டு செல்ல முடியாத நிலையில், சூப்பர்

காஞ்சிபுரம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வீட்டில் இருந்தபடியே, மளிகை பொருட்களை, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் 'ஆர்டர்' செய்தால், காஞ்சிபுரத்தில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளில், 'டோர் டெலிவரி' செய்யும் சேவை துவக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று, கடந்தாண்டு பரவ துவங்கியதும், கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதனால், வீட்டை விட்டு செல்ல முடியாத நிலையில், சூப்பர் மார்க்கெட் கடைகள், மளிகை பொருட்ளை, வீட்டுக்கே வந்து கொடுத்தன.இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், மே, 6 முதல், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், அரசு, பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதனால், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள, சூப்பர் மார்க்கெட் ஒன்றில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே, 'வாட்ஸ் ஆப்' எண் வாயிலாக ஆர்டர் செய்தால், மளிகை பொருட்களை, 'டோர் டெலிவரி' செய்யும் சேவை துவக்கப்பட்டு உள்ளது.இதேபோல், காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள பிற பலசரக்கு மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும், டோர்டெலிவரி செய்யும் சேவையை துவக்கினால், பொதுமக்கள் கூட்டம் சேருவதை தவிர்த்து, கொரோனா பரவலை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X