சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கர் நகரில் மகனை வெட்டிய தந்தை கைது

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை அடுத்த பல்லாவரத்தில், தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறில், மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை, போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் அடுத்த, பொழிச்சலுார், விநாயகர் நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 77; சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். சுப்பிரமணியனுக்கு, நான்கு மகள்கள், ஐந்து மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தன் சொத்துக்களை,

சென்னை : சென்னை அடுத்த பல்லாவரத்தில், தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறில், மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை, போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம் அடுத்த, பொழிச்சலுார், விநாயகர் நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 77; சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். சுப்பிரமணியனுக்கு, நான்கு மகள்கள், ஐந்து மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தன் சொத்துக்களை, அவர்களுக்கு, சமமாக பிரித்து கொடுத்து, சுப்பிரமணியன், வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது ஆறாவது மகன் முருகன், 45, அதே பகுதியில், சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியை அடைத்து, தன் தந்தையையும், அவரது கடைசி சகோதரரான பார்த்திபன் என்பவரையும், தண்ணீர் எடுக்கக் கூடாது எனக்கூறி, முருகன் சண்டையிட்டு வந்தார்.

நேற்று காலை, முருகன், தன் தந்தையை ஆபாச வார்த்தைகளால் வசைபாடி உள்ளார்.இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், முருகனை, அரிவாளால் வெட்டினார். தடுத்த, முருகனின் மனைவி மாரிசெல்விக்கும் வெட்டு விழுந்தது. சங்கர் நகர் போலீசார், சுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X