பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை! அரசு அலுவலகங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த.... நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

Updated : மே 05, 2021 | Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : அரசு அலுவலகங்களில், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க, மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமைகளில், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமும், அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்கள் முழுதும் துாய்மைப்படுத்தி, கிருமி நாசினி
 கோரிக்கை!  அரசு அலுவலகங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த.... நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

சென்னை : அரசு அலுவலகங்களில், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க, மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமைகளில், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமும், அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்கள் முழுதும் துாய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி, கடந்த ஆண்டு முழுதும், அரசு அலுவலகங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, இந்த உத்தரவை, சில அரசு அலுவலங்களில் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில், நாளை முதல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போல், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அரசு அலுவலங்களில் துாய்மைப்பணி செய்ய அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும், தீவிரப்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X