முழு ஊரடங்கு: பிரதமர் ஆலோசனை

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், நம் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.

புதுடில்லி:நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், நம் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இரண்டாவது அலை துவங்கியபோது, 'அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்' என, பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், முழு ஊரடங்கு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. முழு ஊரடங்கை அமல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரப்பு தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X