சில வரி செய்திகள்...: உலகம்

Updated : மே 05, 2021 | Added : மே 04, 2021
Share
Advertisement
மெட்ரோ ரயில் விபத்து: 23 பேர் பலிமெக்சிகோ சிட்டி : வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டியில், மெட்ரோ ரயில் பாதையில் உள்ள மேம்பாலம் சரிந்து விழுந்தது. அப்போது அந்த பாதையில் சென்ற ரயில், சாலையில் விழுந்தது. இந்த விபத்தில், 23 பேர் உயிரிழந்தனர்; 70 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள். 'இந்த மெட்ரோ போக்குவரத்து, 1969ல்
 சில வரி செய்திகள்...: உலகம்

மெட்ரோ ரயில் விபத்து: 23 பேர் பலி

மெக்சிகோ சிட்டி : வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டியில், மெட்ரோ ரயில் பாதையில் உள்ள மேம்பாலம் சரிந்து விழுந்தது. அப்போது அந்த பாதையில் சென்ற ரயில், சாலையில் விழுந்தது. இந்த விபத்தில், 23 பேர் உயிரிழந்தனர்; 70 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள். 'இந்த மெட்ரோ போக்குவரத்து, 1969ல் துவக்கப்பட்டது. இதுபோன்ற பெரிய விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறை' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளுக்கு இடையில், கார்களும் சிக்கியுள்ளன.

தடை அமலானது

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், இந்தியப் பயணியர் வருகைக்கு தடை விதித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர், பத்திரிகையாளர் உள்பட சில பிரிவினருக்கு, இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானில், நெடுஞ்சாலையில் சென்ற பஸ், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்; 35 பேர் காயமடைந்தனர். எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் விபத்துக்குள்ளானதாக, போலீசார் தெரிவித்தனர்.

மாரடோனா சாவில் மர்மம்

பியூனஸ் அர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியாஜோ மாரடோனா, 60, மாரடைப்பால், கடந்தாண்டு இறந்தார். அவரது மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், 'அவர், 12 மணி நேரம் மிகுந்த வலி, வேதனையை அனுபவித்துள்ளார். உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள், சர்ச்சை இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உதவ நடிகர் அழைப்பு

லண்டன்: கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்குவதற்கு நன்கொடை அளிக்கும்படி, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் மெக்காவி, தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலை தளத்தில் இது குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.

நிதி திரட்டிய மூவர்

வாஷிங்டன் : இந்தியாவை பூர்வீகமாக உடைய அமெரிக்காவில் வசிக்கும், மூன்று சகோதர சகோதரிகள்,, இந்தியாவுக்கு உதவுவதற்காக, 2.07 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். தங்களுடைய பள்ளி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து இந்தத் தொகையை அவர்கள் வசூலித்துள்ளனர். ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி, இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக, சகோதரிகள் கியா குப்தா, கரினா குப்தா மற்றும் அவர்களது சகோதரன் அர்மான் குப்தா கூறியுள்ளனர். இவர்கள் மூவரும், ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு, 15 வயதாகிறது.

வெளிநாட்டு பயணத்துக்கு கட்டுப்பாடு

துபாய் : மேற்காசிய நாடான குவைத் அரசு, வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாட்டை, வரும், 22 முதல் அறிமுகம் செய்ய உள்ளது. 'கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், பயணம் மேற்கொள்ள முடியாது' என, குவைத் அரசு கூறியுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதால், இரண்டாவது, 'டோஸ்' நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்காவின் 'பைஸர்' தடுப்பூசியை 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த எப்.டி.ஏ. எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு கடந்த மாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த ஒரு வார காலத்தில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'அதன் பின் 12 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த விரைவில் அனுமதி அளிக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X