இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் பேச்சு| Dinamalar

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் பேச்சு

Added : மே 04, 2021
Share
லண்டன்:பிரிட்டனில், இந்திய - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.ஐரோப்பாவைச் சேர்ந்த, பிரிட்டனில், 'ஜி7' நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று துவங்கியது. இதையொட்டி, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றுள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், அன்டோனி பிளிங்கனை சந்தித்து பேசினார். இது குறித்து ஜெய்சங்கர்,

லண்டன்:பிரிட்டனில், இந்திய - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

ஐரோப்பாவைச் சேர்ந்த, பிரிட்டனில், 'ஜி7' நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று துவங்கியது. இதையொட்டி, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றுள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், அன்டோனி பிளிங்கனை சந்தித்து பேசினார்.

இது குறித்து ஜெய்சங்கர், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:நீண்ட காலத்திற்கு பின், நண்பர் அன்டோனி பிளிங்கனை நேரில் சந்தித்து பேசினேன். இருவரும், இந்திய - பசிபிக் பிராந்திய கடல் பகுதியின் பாதுகாப்பு, மியான்மர் ராணுவ அரசின் நடவடிக்கை, பருவ நிலை மாற்றம், ஐ.நா., பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவது உள்ளிட்டவை குறித்து பேசினோம்.

இந்தியாவின் கொரோனா சவாலை சமாளிக்க, ஆக்சிஜன், 'ரெம்டெசிவிர்' மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பியதற்கு, நன்றி தெரிவித்தேன்.தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, நம்பகத்தன்மை மிக்க வினியோக கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம்.அனைத்து பிரச்னைகளிலும், அமெரிக்கா, இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் என, அன்டோனி பிளிங்கன் உறுதி அளித்தார்.

கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பின் போது, இந்தியா, அமெரிக்காவுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியது. அதேபோல, தற்போது நெருக்கடியில் உள்ள இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவுவதாக, அன்டோனி பிளிங்கன் தெரிவித்தார். அடுத்த சில தினங்களில், மேலும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X