யோகா ஆசிரியை கொலை வழக்கறிஞர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யோகா ஆசிரியை கொலை வழக்கறிஞர் தற்கொலை

Added : மே 04, 2021
Share
திருமங்கலம்:திருமங்கலத்தில், தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர், யோகா டீச்சரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர், ஹரிகிருஷ்ணன், 41; வக்கீல். திருமணமாகி, 11 வயதில் மகள் உள்ளார். எட்டாண்டுகளாக, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மகளுக்கு யோகா பயிற்சி அளிக்க, பா.ம.க., நிர்வாகி கன்னையா மகள் சித்ராதேவி, 33, வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.சித்ராதேவி
 யோகா ஆசிரியை கொலை வழக்கறிஞர் தற்கொலை

திருமங்கலம்:திருமங்கலத்தில், தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர், யோகா டீச்சரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர், ஹரிகிருஷ்ணன், 41; வக்கீல். திருமணமாகி, 11 வயதில் மகள் உள்ளார். எட்டாண்டுகளாக, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மகளுக்கு யோகா பயிற்சி அளிக்க, பா.ம.க., நிர்வாகி கன்னையா மகள் சித்ராதேவி, 33, வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.

சித்ராதேவி திருமணமாகி, விவாகரத்தானவர். இருவரும் நெருங்கி பழகி, திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஏப்., 2ல் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு சித்ராதேவி வந்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சித்ராதேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, குளியலறையில் ஹரிகிருஷ்ணன் புதைத்துள்ளார்.மகளை காணவில்லை என, போலீசில் கன்னையா புகார் அளித்தார்.

போலீசார், ஹரிகிருஷ்ணனிடம் மேலோட்டமாக விசாரித்து, சென்று விட்டனர். நேற்று முன்தினம், மகளை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டு வந்த ஹரிகிருஷ்ணன், நான்கு பக்க கடிதம் எழுதி வைத்து, துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். கடிதத்தை படித்த பிறகே, சித்ராதேவி கொலை செய்து புதைக்கப்பட்டது தெரிந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X