சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனையில் தகராறு இருவர் வெட்டிக்கொலை

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார்:கோவை அருகே, கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில், இருவர் குத்திக் கொல்லப்பட்டனர். ஐந்து பேரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், சூலுார் பள்ளபாளையம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 52; இவரது மகன் சரவணகுமார், 28; கஞ்சா வியாபாரி.இவருக்கும், சிங்காநல்லுார் கக்கன் நகரைச் சேர்ந்த வசந்த், 30, என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக, முன் விரோதம்

சூலுார்:கோவை அருகே, கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில், இருவர் குத்திக் கொல்லப்பட்டனர். ஐந்து பேரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்டம், சூலுார் பள்ளபாளையம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 52; இவரது மகன் சரவணகுமார், 28; கஞ்சா வியாபாரி.இவருக்கும், சிங்காநல்லுார் கக்கன் நகரைச் சேர்ந்த வசந்த், 30, என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக, முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஆனந்த் குடிபோதையில், வசந்த் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் வசந்த் மற்றும் நண்பர்கள் மகேஷ், 28, பிரேம் ஆகியோர், ஆனந்தை அவரது வீட்டுக்கு சென்று தாக்கி உள்ளனர்.அவர் கொடுத்த புகாரின்படி, சூலுார் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலை வசந்த் மற்றும் கூட்டாளிகள் இருவர், மீண்டும் ஆனந்துடன் தகராறு செய்துள்ளனர்.

தடுக்க முயன்ற மகன் சரவணகுமாரை கத்தியால் குத்தினர். இதையடுத்து, அவரது தம்பி சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் மூவர் சேர்ந்து, வசந்த், மகேஷ் மற்றும் பிரேமை ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில், வசந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த மகேஷ், பிரேம், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை மகேஷ் இறந்தார். சரவணகுமார், சதீஷ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X