சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழிகிறது நெல்லை ஜி.எச்., ஆம்புலன்சில் காத்திருந்த பெண் பலி

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், படுக்கை கிடைக்காமல், ஒரு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட பெண், கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.திருநெல்வேலி, தியாகராஜ நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சந்திரிகா, 59; மூச்சு திணறலால், '108' அவசரகால ஆம்புலன்சில் நேற்று மதியம், 12:10க்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.ஆனால், அங்கு இடம்
 நிரம்பி வழிகிறது நெல்லை ஜி.எச்., ஆம்புலன்சில் காத்திருந்த பெண் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், படுக்கை கிடைக்காமல், ஒரு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட பெண், கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி, தியாகராஜ நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சந்திரிகா, 59; மூச்சு திணறலால், '108' அவசரகால ஆம்புலன்சில் நேற்று மதியம், 12:10க்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.ஆனால், அங்கு இடம் இல்லை என, கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பினர். அங்கும் இடமில்லாமல், மீண்டும் பழைய வார்டுக்கே அனுப்பினர்.

ஒரு மணி நேரம், ஆம்புலன்சில் சந்திரிகா அலைக்கழிக்கப்பட்டார். சிகிச்சை கிடைக்க வில்லை. ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் மூலம் உயிர் காக்கப்பட்டு வந்தது. அலைக்கழிப்பிற்கு பின், வார்டுக்குள் கொண்டு செல்லும் முன்பாகவே, மதியம், 1:20 மணிக்கு கணவர் கண் முன்னே இறந்தார்

.ரவிச்சந்திரன் கண்ணீர் மல்க கூறும்போது, ''வந்ததும் சிகிச்சை கிடைத்திருந்தால், என் மனைவி பிழைத்திருப்பார்,'' என்றார். சந்திரிகாவிற்கு கொரோனா சோதனை எதுவும் நடத்தப்படாததால், அவரது உடல், கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தொடரும் காத்திருப்பு



இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்க முயற்சித்தபோது, அனைவரும் கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்த காணொலி கூட்டத்தில் இருப்பதாக ரிவிக்கப்பட்டது.திருநெல்வேலியில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. நேற்று சங்கரன்கோவிலில் இருந்து ஆம்புலன்சில் வந்த மரியம்பீவி என்பவர், மூன்று மணி நேரம் ஆம்புலன்சில் உள்ள ஆக்சிஜன் உதவியோடு உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

ஆக்சிஜன் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள், கொரோனா வார்டு வாசலில் படுத்து கிடக்கின்றனர். நேற்று மாலை இதயவியல் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகளில் புதிதாக, 30 படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால், காத்திருந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


மூவர் உயிரிழப்பு



சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பிரிவு, 800 படுக்கை வசதியுடன் செயல்படுகிறது. இது, முழுமையாக நிரம்பியதால், புதிதாக வந்த நோயாளிகளை சேர்க்க முடியாத நிலை உருவானது.அதேபோல், மாவட்டத்தில் உள்ள, 38 தனியார் மருத்துவ மனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, 1,600க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவையும் முழுமையாக நிரம்பிவிட்டன. இதனால், அங்கிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு, 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில், கொரோனா நோயாளிகள் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு, மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால், ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப் பட்டது. இதில், 36 வயது பெண், 47 - 49 வயது ஆண்கள் என, மூன்று பேர் உயிரிழந்தனர்.


'டீன்' முருகேசன் கூறியதாவது:



இங்குள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 800 படுக்கைகளும் நிரம்பி விட்டன. இது குறித்து, தனியார் மருத்துவமனைகளிடமும் தெரிவிக்கப்பட்டு, நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் தகவல் தெரிவிக்காமலே இங்கு அனுப்புகின்றனர். இதனால், ஆம்புலன்சில் வைத்து சிகிச்சைஅளிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும், 200 படுக்கை வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சிகிச்சை பெற்று வந்தவர்கள், குணம் அடைந்து திரும்பினால்தான் புதிதாக வருபவர்களுக்கு படுக்கை ஒதுக்க முடியும். இதனால், உயிரிழப்பு கைமீறி செல்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மே-202118:20:21 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan ரவிச்சந்திரன் மனைவி சந்திரிகா, 59 47 - 49 வயது ஆண்கள் ..தடுப்பூசி போட வில்லையா ? 45 வயது கு தடுப்பூசி போட சொல்லி 2 மாதம் ஆகி விட்டது . ஏன் போடவில்லை ? தடுப்பூசி போடாமல் காரோண தாக்கி உயிரை குடுக்க வேண்டாம் ..எல்லோரும் தடுப்பூசி போடவும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X