சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போடி பெண்ணிடம் ரூ.38.50 லட்சம் மோசடி: அமெரிக்கா, டில்லியைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
தேனி:போடி பெண்ணிடம் அமெரிக்கா, புதுடில்லியை சேர்ந்த இருவர் உதவி செய்வதாக 'முகநுால் மெசஞ்சர்' மூலம் கூறி, ரூ.38.50 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி பத்ரகாளிபுரம் அருண்பாண்டியன் மனைவி டேபேரா பேட்ரீஸ் 39. இவருக்கும், அமெரிக்காவை சேர்ந்த ஜித்தன்ஜாவல் என்பவருக்கும் 'முகநுால் மெசஞ்சர்' முகவரி மூலம் கடந்தாண்டு ஜூலை மாதத்தில்

தேனி:போடி பெண்ணிடம் அமெரிக்கா, புதுடில்லியை சேர்ந்த இருவர் உதவி செய்வதாக 'முகநுால் மெசஞ்சர்' மூலம் கூறி, ரூ.38.50 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போடி பத்ரகாளிபுரம் அருண்பாண்டியன் மனைவி டேபேரா பேட்ரீஸ் 39. இவருக்கும், அமெரிக்காவை சேர்ந்த ஜித்தன்ஜாவல் என்பவருக்கும் 'முகநுால் மெசஞ்சர்' முகவரி மூலம் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் டேபேராபேட்ரீஸ் தந்தை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு செலவிற்காக 'நான் 30000 அமெரிக்க டாலர்கள் அனுப்புகிறேன்' என ஜித்தன்ஜாவல் கூறினார்.

அமெரிக்க டாலரை, இந்திய பணமாக மாற்ற, டில்லியில் ஏஜன்டு இருக்கிறார் என புதுடில்லி கென்னட் பரக்காம்பா ரோட்டை சேர்ந்த செட்ரா என்பவரை, டேபேரா பேட்ரீஸிடம் அறிமுகம் செய்துள்ளார். அதன் பின் பணத்தை மாற்ற 'மணி டிரான்ஸ்பர்' நிறுவனங்களுக்கு பணம் வழங்க வேண்டும் எனக் கூறி பல்வேறு தவணைகளில் ரூ.38.50 லட்சத்தை பெற்று ஏமாற்றினர். ஜித்தன்ஜாவல், செட்ரா மீது 4 பிரிவுகளில் தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வனிதா, பாக்கியம் எஸ்.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X