அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் இல்லாத கோவை மாவட்டம் திருப்பூர், நீலகிரியில் யாருக்கு வாய்ப்பு?

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு இல்லை.திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், வென்ற ஆறு பேரில், யாருக்கு அமைச்சர் பதவி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள், அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படுபவை. கடந்த லோக்சபா தேர்தலில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்,

திருப்பூர்:கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு இல்லை.

திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், வென்ற ஆறு பேரில், யாருக்கு அமைச்சர் பதவி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள், அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படுபவை. கடந்த லோக்சபா தேர்தலில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு தொகுதிகள், தி.மு.க., கூட்டணி வசமானது.

இந்த முறை, சட்டசபை தேர்தலில், தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில், தி.மு.க., ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், தாராபுரம், திருப்பூர் தெற்கு, ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், ஈரோடு மேற்கு என ஐந்து தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது.அண்டை மாவட்டமான நீலகிரியில், குன்னுாரில் தி.மு.க., வென்றது; கூடலுாரில் தோற்றது.

கொங்கு மண்டலத்தில், முக்கிய மாவட்டங்களான இவற்றில் இருந்து, மொத்தம் ஆறு தி.மு.க., வேட்பாளர்கள் மட்டுமே வென்றுள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான புதிய தி.மு.க., அமைச்சரவையில், மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம்; ஆனால், ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், கோவைக்கு இதற்கான வாய்ப்பு இல்லை.

காங்கேயத்தில் வென்ற சாமிநாதன், குன்னுாரில் வென்ற ராமச்சந்திரன், ஈரோடு மேற்கில் வென்ற முத்துசாமி ஆகியோர், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்.திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் தி.மு.க., சார்பில் வென்றுள்ள ஆறு பேரில், எவ்வளவு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பழனி்சாமி.,அமைச்சரவை

கோவை மாவட்டத்தில், வேலுமணி, திருப்பூரில் ராதாகிருஷ்ணன், ஈரோடில் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், இ.பி.எஸ்., அரசில், அமைச்சர்களாக இருந்தனர். சபாநாயகராக தனபால் - அவிநாசி, துணை சபாநாயகராக ஜெயராமன் - பொள்ளாச்சி ஆகியோர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X