அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் தனி மெஜாரிட்டிக்கு உதவிய டெல்டா மாவட்டங்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருச்சி:சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்க, டெல்டா மாவட்டங்களில், 35 தொகுதிகளில் பெற்ற வெற்றியே காரணமாகி உள்ளது.சட்டசபைத் தேர்தலில், 125 இடங்களில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க., கூட்டணி, 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல், தி.மு.க., ஆட்சியில் அமர, காவிரி பாயும் டெல்டா

திருச்சி:சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்க, டெல்டா மாவட்டங்களில், 35 தொகுதிகளில் பெற்ற வெற்றியே காரணமாகி உள்ளது.

சட்டசபைத் தேர்தலில், 125 இடங்களில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க., கூட்டணி, 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல், தி.மு.க., ஆட்சியில் அமர, காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களான கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலுார், புதுக்கோட்டை ஆகிய, ஏழு மாவட்டங்களில் பெற்ற வெற்றியே காரணமாக அமைந்துள்ளது.

கரூர் - 4, திருச்சி - 9, புதுக்கோட்டை - 6, தஞ்சாவூர் - 8, நாகை - 3, திருவாரூர் - 4, மயிலாடுதுறை - 3, அரியலுார் - 2 என, மொத்தம், 39 சட்டசபை தொகுதிகள், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ளன. இந்த தொகுதிகளில், 2016ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க., 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. தற்போது, அதை விட அதிகமாக, 15 தொகுதிகளை பெற்றுள்ளது.

இத்தனைக்கும், 10 ஆண்டுகளில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பல கோரிக்கைகளை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் இடம் பெறச் செய்தது, காவிரி மேலாண் வாரியம் அமைத்தது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உட்பட, பல விஷயங்களை அ.தி.மு.க., அரசு செய்துள்ளது. அப்படி இருந்தும், டெல்டா மாவட்ட மக்கள், தி.மு.க.,வை அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர்


39ல் 4 மட்டுமே

இந்த ஏழு மாவட்டங்களில் உள்ள, 39 தொகுதிகளில், நான்கில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர் - விராலி மலை, காமராஜ் - நன்னிலம், ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம், ராஜ்யசபா எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் - ஒரத்தநாடு ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X