அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வருடன் நிர்வாகிகள் சந்திப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்:முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், இரண்டாம் நாளாக நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததால், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., முகாமிட்டுள்ளார். நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள், அவரை சந்தித்தனர்.இரண்டாம் நாளாக நேற்று,

சேலம்:முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், இரண்டாம் நாளாக நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததால், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., முகாமிட்டுள்ளார். நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள், அவரை சந்தித்தனர்.இரண்டாம் நாளாக நேற்று, முன்னாள் அமைச்சர்களான உதயகுமார், வளர்மதி, கிருஷ்ணன், ராமச்சந்திரன், பாஸ்கர் உட்பட தமிழகம் முழுதும் இருந்து நிர்வாகிகள், அவரை சந்தித்தனர்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு, இன்னும் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதை உணர்த்துகிறது. கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மக்களை காக்க, புது அரசும், எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு, வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது.

ஐந்துமுனை போட்டியில், மூன்று கட்சிகளை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். தலைமை ஏற்று, மக்களுக்கு சேவையாற்றலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சேவையாற்ற கூடிய தீர்ப்பை, மக்கள் வழங்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறுகையில், ''எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை, எம்.எல்.ஏ.,க்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X