பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் தொகுதியில் 23 பேர் 'டிபாசிட்' இழப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில், 23 பேர் 'டிபாசிட்' இழந்தனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 25 பேர் போட்டியிட்டனர். இதனால், இத்தொகுதியில் இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தேர்தலில், மொத்தமுள்ள

விழுப்புரம் : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில், 23 பேர் 'டிபாசிட்' இழந்தனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 25 பேர் போட்டியிட்டனர். இதனால், இத்தொகுதியில் இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தேர்தலில், மொத்தமுள்ள 2,62,068 ஓட்டுகளில் 2,01,726 ஓட்டுகள் பதிவாகியது. இதில், கடந்த 2ம் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., லட்சுமணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., சண்முகத்தைவிட 14,868 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றால் மட்டுமே டிபாசிட் பெற முடியும். இதன் காரணமாக விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தவர்களில் அ.தி.மு.க., சண்முகத்தை தவிர்த்த மற்ற 23 பேரும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X