தமிழ்நாடு

அமைச்சர் தொகுதி அந்தஸ்தை விழுப்புரம் தக்க வைக்குமா?

Added : மே 05, 2021
Share
Advertisement
விழுப்புரம்: அமைச்சர் தொகுதி அந்தஸ்தை விழுப்புரம் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த விழுப்புரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க.,வில் வெற்றி பெற்ற பொன்முடி சுகாதாரத்துறை அமைச்சராகவும், 91ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற ஜனார்த்தனன் பால்வளத் துறை அமைச்சராக பதவி

விழுப்புரம்: அமைச்சர் தொகுதி அந்தஸ்தை விழுப்புரம் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த விழுப்புரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க.,வில் வெற்றி பெற்ற பொன்முடி சுகாதாரத்துறை அமைச்சராகவும், 91ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற ஜனார்த்தனன் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தனர்.அதனைத் தொடர்ந்து 1996 மற்றும் 2006ல் தி.மு.க.,வில் வெற்றி பெற்ற பொன்முடி முறையே போக்குவரத்து மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தல்களில் அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற சண்முகம் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.

இப்படி கடந்த 1989ம் ஆண்டு முதல் (2011 முதல் 2016 வரை நீங்கலாக) 2021வரை அமைச்சர் தொகுதி அந்தஸ்தை பெற்று வந்த விழுப்புரம் தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியாக நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள தி.மு.க.,வே வெற்றி பெற்றுள்ளது.அதனால், கடந்த 32 ஆண்டுகளில் 25 ஆண்டாக வகித்து வந்த அமைச்சர் தொகுதி அந்தஸ்தை விழுப்புரம் தொகுதி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X