கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கடைகள் காலி செய்ய உத்தரவு

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை:திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள கடைகளை காலி செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில், 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் அருகே, சில கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை எதிர்த்து சிலர், உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். மனுக்களை, தனி நீதிபதி

மதுரை:திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள கடைகளை காலி செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில், 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் அருகே, சில கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை எதிர்த்து சிலர், உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். மனுக்களை, தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து, சிலர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, 'மனுதாரர்கள், மே, 30க்குள் கடைகளை காலி செய்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால், அகற்றுவதற்கு அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X