தமிழ்நாடு

அ.தி.மு.க., ஓட்டுகள் தி.மு.க.,விற்கா? செஞ்சி தொகுதி பா.ம.க.,வினர் அதிர்ச்சி

Added : மே 05, 2021
Share
Advertisement
செஞ்சி : தி.மு.க., பா.ம.க., இடையே கடும் போட்டி நிலவிய செஞ்சி தொகுதியில் தி.மு.க., அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பா.ம.க.,வினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.செஞ்சி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக பா.ம.க., உள்ளது. பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளே வெற்றி பெற்றன.கடந்த 2016 தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டது. பதிவான 2,01,048

செஞ்சி : தி.மு.க., பா.ம.க., இடையே கடும் போட்டி நிலவிய செஞ்சி தொகுதியில் தி.மு.க., அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பா.ம.க.,வினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

செஞ்சி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக பா.ம.க., உள்ளது. பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளே வெற்றி பெற்றன.கடந்த 2016 தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டது. பதிவான 2,01,048 ஓட்டுகளில், தி.மு.க., வை சேர்ந்த மஸ்தான் 88,440; அ.தி.மு.க., வை சேர்ந்த கோவிந்தசாமி 66,383; தனித்து போட்டியிட்ட பா.ம.க., கணேஷ்குமார் 28,515; தே.மு.தி.க.,-வி.சி., - கம்யூ., கட்சிகளின் கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க., மணி 10,672; பா.ஜ., ராஜேந்திரன் 1,443 ஓட்டுகள் பெற்றனர்.

அதில், தி.மு.க., மஸ்தான் 22,057 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் செஞ்சி தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டது. இது தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியது. வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பா.ம.க., திண்ணை பிரசாரத்தை முடுக்கி விட்டது. இதனால் தி.மு.க.,வுக்கு வெற்றி எளிதாக கிடைக்காது என்ற கருத்து நிலவியது.

ஆனால் இந்த கருத்தை தவிடு பொடியாக்கி தி.மு.க., வேட்பாளர் மஸ்தான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளரை விட 35,803 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட இந்த முறை 13,746 ஓட்டுகள் அதிகம் பெற்றிருப்பது பா.ம.க.,வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.பா.ம.க., வலுவான கிராமங்களில் அதிக ஓட்டுக்களை பெற்றது.

ஆனால் கடந்த முறை அ.தி.மு.க.,விற்கு அதிக ஓட்டுகள் பதிவான கிராமங்களில் இம்முறை பா.ம.க.,வுக்கு ஓட்டு கிடைக்கவில்லை. அ.தி.மு.க.,வின் அதிருப்தி ஓட்டுகள் அ.ம.மு.க.,விற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி இந்த கிராமங்களில் தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது.கூட்டணியில் இருந்த அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காமல் தி.மு.க.,விற்கு சென்றது பா.ம.க.,வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X