சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் இறந்தவர் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு :கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மூங்கில்துறைப்பட்டு- கள்ளக்குறிச்சி சாலையில் நேற்று முன்தினம் மாலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கொரோனாவால் இறந்தார். அவர் உடலை இரவு 11 மணிக்கு அண்ணாநகர் தென்பெண்ணையாற்று மயானத்தில் தகனம் செய்வதற்கு விறகு கட்டைகள் இறக்கினர்.இதனை அறிந்த அப்பகுதி

மூங்கில்துறைப்பட்டு :கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு- கள்ளக்குறிச்சி சாலையில் நேற்று முன்தினம் மாலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கொரோனாவால் இறந்தார். அவர் உடலை இரவு 11 மணிக்கு அண்ணாநகர் தென்பெண்ணையாற்று மயானத்தில் தகனம் செய்வதற்கு விறகு கட்டைகள் இறக்கினர்.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் பாலசேகர், வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலையில் அடக்கம் செய்கிறோம் என்று கூறியதால் அனைவரும் கலைந்துச் சென்றனர்.பின் நேற்று காலை 8 மணிக்கு இறந்தவர் உடலை தகனம் செய்தனர்.பொதுமக்கள் கோரிக்கைகொரோனாவால் இறப்பவர்களின் உடலை அண்ணாநகரை ஒட்டியுள்ள மயானத்தில் தகனம் செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X