சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் 86 பேர் கைதாகி விடுவிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற, 86 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, ஒன்பது மணி நேரத்திற்கு பின் விடுவித்தனர்.மே 3ல் பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து, நாட்டு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு ரோந்து வந்த, இலங்கை கடற்படை வீரர்கள், இவர்களின், 11 படகுகளை பிடித்து,
 மீனவர்கள் 86 பேர்  கைதாகி விடுவிப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற, 86 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, ஒன்பது மணி நேரத்திற்கு பின் விடுவித்தனர்.

மே 3ல் பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து, நாட்டு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு ரோந்து வந்த, இலங்கை கடற்படை வீரர்கள், இவர்களின், 11 படகுகளை பிடித்து, அதில் இருந்த, 86 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்களிடம் இலங்கை போலீசார், மீன் துறையினர் விசாரணை நடத்தி, படகுகள் விபரம், மீனவர்கள் பெயர்களை பதிவு செய்தனர். கொரோனா பரவலால், சிறையில் அடைக்காமல், ஒன்பது மணி நேரத்திற்குப் பின், அனைவரையும் விடுவித்தனர்.'எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக்கூடாது, மீண்டும் வந்தால் சிறையில் அடைத்து விடுவோம்' என, எச்சரித்தனர்.

மாலை, 5:00 மணிக்கு, 11 படகுகளுடன், 86 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் காத்திருந்த கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X