சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியால் பரபரப்பு

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகத்தில், கட்சிக் கொடியை பறக்க விட்ட தி.மு.க.,வினர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, கோவை கிணத்துக்கடவு தொகுதியில், அ.தி.மு.க.,
 தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியால் பரபரப்பு

கோவை:கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகத்தில், கட்சிக் கொடியை பறக்க விட்ட தி.மு.க.,வினர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, கோவை கிணத்துக்கடவு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் மற்றும் தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் மாறி, மாறி முன்னிலை வகித்தனர்.மாலையில், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். அவர் வெற்றி பெற்று விட்டார் என, தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர்.

இதையடுத்து, தி.மு.க.,வினர் சிலர், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.தொடர்ந்து, அவர்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில், தி.மு.க., கட்சிக் கொடியை பறக்க விட்டனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.இச்செய்தி அறிந்த தி.மு.க.,வினர் கட்சிக் கொடியை அகற்றினர்.

கட்சியினர் கொடி ஏற்றியதை படம் எடுத்த சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியை ஏற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
05-மே-202120:58:20 IST Report Abuse
r.sundaram அவங்களுக்கு என்னய்யா தெரியும். எதோ ஒரு கம்பு இருந்தது கட்சிக்கொடியை ஏத்திட்டாங்க. அவுங்களுக்கு தேசியம் தெரியுமா, தேசியக்கொடி ஏற்றும் கம்பம் இன்னு தெரியுமா. எந்தக்கம்பமா இருந்தா என்ன திமுக கோடியை ஏற்றனும், அவ்வளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X