வைக்கோல் ஏற்றிய டிராக்டர் டிப்பரில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைக்கோல் ஏற்றிய டிராக்டர் டிப்பரில் தீ

Added : மே 05, 2021
Share
விழுப்புரம் : வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிப்பர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.கிளியனுார் அடுத்த கொஞ்சுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம். டிரைவரான இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த பக்கிரிசாமி நிலத்தில் இருந்த டி.என்.10 எப்., 0724 பதிவெண் கொண்ட டிராக்டர் டிப்பரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். வயலை கடக்க முயன்றபோது, மேலே சென்ற மின்கம்பி

விழுப்புரம் : வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிப்பர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கிளியனுார் அடுத்த கொஞ்சுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம். டிரைவரான இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த பக்கிரிசாமி நிலத்தில் இருந்த டி.என்.10 எப்., 0724 பதிவெண் கொண்ட டிராக்டர் டிப்பரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். வயலை கடக்க முயன்றபோது, மேலே சென்ற மின்கம்பி உரசியதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.அதில், டிராக்டர் டிப்பர் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது. இதன் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும்.இதுகுறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X