கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்

Added : மே 05, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் முழு ஊடரங்குக்கு இணையாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.மாநிலத்தில் நூறு பேருக்கு பரிசோதனை நடத்தினால் சராசரியாக 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்குக்கு இணையாக பல்வேறு தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு அமலுக்கு வந்தது.அதன்படி மருந்து மளிகை காய்கறி

மூணாறு:கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் முழு ஊடரங்குக்கு இணையாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

மாநிலத்தில் நூறு பேருக்கு பரிசோதனை நடத்தினால் சராசரியாக 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்குக்கு இணையாக பல்வேறு தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

அதன்படி மருந்து மளிகை காய்கறி பால்பழம் மீன் இறைச்சி பெட்ரோல் பங்க் ஆட்டோ மொபைல் வாகன சர்வீஸ் மையம் ஒர்க் ஷாப் திறக்கப்பட்டன.அரசு அலுவலகங்களில் 25 சதவீதம் பணியாளர்களும் அரசு பஸ்களில் 50 சதவீதம் பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர். வங்கிகளில் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செயல்பட்டன.

உணவகங்களில் ஆகியவற்றில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது.இந்த கட்டுப் பாடுகள் மே 9 வரை அமலில் இருக்கும். மூணாறில் போலீசார் சோதனையை தீவிரப் படுத்தியதால் மக்கள் நடமாட்டம் இன்றி நகர் வெறிச்சோடியது. தேனி மாவட்டத்தில் இருந்து கம்பமெட்டு குமுளி வழியாக இடுக்கி ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.கூடலுாருடன் பஸ்கள் நிறுத்தம்கேரளத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக எல்லைப்பகுதியான குமுளி வரை இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் 6 கி.மீ. துாரம் முன் உள்ள தேனிமாவட்டம் லோயர்கேம்ப் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X