சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து பலி

Added : மே 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : பைக்கில் சென்ற விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.வளவனுார் அடுத்த பி.கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பழனி,50; விவசாயி. இவர் நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் சிரமப்பட்டு வந்துள்ளார். இவர், நேற்று புதுச்சேரி மதகடிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரை வாங்க பைக்கில் புறப்பட்டார்.கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே சென்றபோது,

விழுப்புரம் : பைக்கில் சென்ற விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.

வளவனுார் அடுத்த பி.கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பழனி,50; விவசாயி. இவர் நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் சிரமப்பட்டு வந்துள்ளார். இவர், நேற்று புதுச்சேரி மதகடிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரை வாங்க பைக்கில் புறப்பட்டார்.கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டு, சாலையோர முட்புதரில் பைக்கோடு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மதகடிபட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், பழனி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.இதுகுறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X