பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயங்திரங்கள் குடோனில் வைத்து 'சீல்' வைப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்படுத்திய ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கலெக்டர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்தது.

கள்ளக்குறிச்சி : சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்படுத்திய ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கலெக்டர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 2911 மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள், 1964 கன்ட்ரோல் யூனிட்டுகள், 2199 ஓட்டுபதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

இயந்திரங்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் தச்சூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டனர். பின் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் நேற்று சீல் வைக்கப்பட்டன.

இதில், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், உதவி ஆணையர் (கலால்) சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், ராஜவேல், சக்திவேல், தனி தாசில்தார் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X