பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் தரிசன தடை; சிறு வியாபாரிகள் கவலை

Added : மே 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்ததால், சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனையுடன் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், பெரு வணிக

விருத்தாசலம் : கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்ததால், சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனையுடன் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், பெரு வணிக வளாகங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், விருத்தாசலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விருத்தகிரீஸ்வரர், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.மேலும், பக்தர்கள் வருகையை தவிர்க்கும் வகையில், முகப்பு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், கோவில் வாசல்களில் தீப விளக்கு, பூ, அர்ச்சனை பொருட்களை விற்பனை செய்து, ஜீவனம் நடத்தி வரும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதித்துள்ளனர். தடை எப்போது நீங்குமோ என கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X