அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென்சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கணிசமான ஓட்டு

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில், தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கணிசமான ஓட்டு கிடைத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம், மூன்றாம், நான்காம் இடத்தில் வந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள, 16 தொகுதிகளில், 10 தொகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன.இதில், அதிகபட்சமாக, தென்சென்னை

சென்னை:சென்னையில், தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கணிசமான ஓட்டு கிடைத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம், மூன்றாம், நான்காம் இடத்தில் வந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள, 16 தொகுதிகளில், 10 தொகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன.இதில், அதிகபட்சமாக, தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட, சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, 30 ஆயிரம்; வேளச்சேரி, 23 ஆயிரம்; விருகம்பாக்கம், 16 ஆயிரம்; தி.நகர், மயிலாப்பூர் தலா, 14 ஆயிரம்; சைதாப்பேட்டை, 13 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன.

வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் கொரோனா பாதித்தது. வீதியில் இறங்கி,பிரசாரம் செய்யாமலே, 23 ஆயிரத்திற்கு மேல் ஓட்டு பெற்றுள்ளார். குறிப்பாக, அதிகம் படித்தோர் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்பு ஓட்டுகள், மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த, லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம், 1.35 லட்சம் ஓட்டு பெற்று, மூன்றாம் இடம் பிடித்தது.இதில், சோழிங்கநல்லுார், 35 ஆயிரம், வேளச்சேரி, 23 ஆயிரம், விருகம்பாக்கம், 21 ஆயிரம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் தலா, 18 ஆயிரம் ஓட்டுக்கு மேல் கிடைத்தது.

தென்சென்னை தொகுதியை பொறுத்தமட்டில், மக்கள் நீதி மய்யம், மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த தேர்தல்களில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதிகளில், அக்கட்சி அதிகம் கவனம் செலுத்தும் என்பதற்கு, இரண்டு தேர்தல்களில் கிடைத்த ஓட்டுகளே சாட்சிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X