தமிழ்நாடு

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அவதி! 'ரெம்டெசிவிர்' மருந்துக்காக காத்திருக்கும் அவலம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆக்சிஜன், மருந்து போன்றவை தட்டுப்பாட்டால் நோயாளிகளின் உறவினர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து மருந்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவுவதால், ஒரே நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பது குதிரைக் கொம்பாகி
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அவதி! 'ரெம்டெசிவிர்' மருந்துக்காக காத்திருக்கும் அவலம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆக்சிஜன், மருந்து போன்றவை தட்டுப்பாட்டால் நோயாளிகளின் உறவினர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து மருந்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவுவதால், ஒரே நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.தற்போது நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 350க்கும் மேல் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 30,474 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 329 பேர் பலியாகியுள்ளனர்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, கூடுதலாக கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி, கந்தசாமி நாயுடு கல்லுாரிகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 இடங்களில் தனிமைப் படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1706 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா நோயாளிகள் பலர் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயின் தன்மை நடுத்தரமாக இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இல்லையென்றால் வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என அறிவுறுத்தப்படுவதால், நோயாளிகள் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சம் அல்ல. வசதி படைத்தவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர்.அரசு முன்வந்து கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, 'ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாட்டால் பல தனியார் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியேறி வருகின்றனர்.மருந்து வாங்க உறவினர்கள் ஆதார் கார்டுடன் மருந்து கடைகளில் தவம் கிடக்கின்றனர். கொரோனா முதல் அலையின் போது, தனியார் மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களை சேர்க்கவே முடியாது என்கிற நிலை மாறி, அவர்களை உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.அவர்களுக்கு தட்டுப்பாடு இன்றி மருந்து கிடைக்கச் செய்தால் கொரோனா நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்பாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X