குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
வடலுார் : குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால் பயணிகள் நிற்க இடமின்றி வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிஞ்சிப்பாடி நகரைச் சுற்றி அதிக அளவில் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினம் குறிஞ்சிப்பாடி நகருக்கு வருகின்றனர். குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது.இதனால் பெரும்பாலான

வடலுார் : குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால் பயணிகள் நிற்க இடமின்றி வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி நகரைச் சுற்றி அதிக அளவில் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினம் குறிஞ்சிப்பாடி நகருக்கு வருகின்றனர். குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது.இதனால் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். கிராம பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ் மற்றும் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் உள்ளே வந்து செல்கின்றன.

பஸ் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் கடைக்கு முன்புறம் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.மேலும் நடைபாதையில் பழக்கடைகள், பூக்கடைகள் உட்பட பல்வேறு தற்காலிக கடைகள் வைத்துள்ளனர்.இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கக் கூட இடமில்லாமல் வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X