சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Added : மே 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் புதுப்பேட்டை காயிதே மில்லத் தெரு மக்களுக்கு சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் புதுப்பேட்டை காயிதே மில்லத் தெரு மக்களுக்கு சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இந்திய கம்யூ., நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், நேற்று மாலை 4:00 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே, விருத்தாசலம் - கடலுார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சமாதானம் ஆகி மாலை 4:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, சப் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட சப் கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X