பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

Added : மே 05, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.ஏ.ஐ.சி.டி.இ., - ஐ.எஸ்.டி.இ., நிதியுதவியின் கீழ் ஐ.ஓ.டி., மற்றும் அதன்பயன்பாடுகள் குறித்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி இணையவழி மூலமாக துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பொறியியல் புல கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பழனிவேல் வரவேற்றார். கொடைக்கானல்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

ஏ.ஐ.சி.டி.இ., - ஐ.எஸ்.டி.இ., நிதியுதவியின் கீழ் ஐ.ஓ.டி., மற்றும் அதன்பயன்பாடுகள் குறித்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி இணையவழி மூலமாக துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பொறியியல் புல கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பழனிவேல் வரவேற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் வைதேகி விஜயகுமார், இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்குகள் குறித்து விளக்கினார்.

டில்லி இந்திய தொழில் நுட்பக்கல்வி சங்கத் தலைவர் பிரதாப்சிங் ககாசோ தேசாய், தலைமையுரையாற்றினார். பொறியியல் புல முதல்வர் முருகப்பன் ஆசிரியர் மேம்பாட்டுபயிற்சி குறித்து உரையாற்றினார்.நிகழ்ச்சியில் நாடு முழுதும் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை இணை ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் அறிவழகன், புனிதா, சத்யா ஆகியோர் தொகுத்து வழங்கினார். கம்ப்யூட்டர் சயின்ஸ் இணை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X