சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

Added : மே 05, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்:திருவொற்றியூரில் மனைவி இறந்த தகவல் அறிந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பன் 86; தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விசாலாட்சி 76. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.இதனிடையே விசாலாட்சி உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு
 இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

திருவொற்றியூர்:திருவொற்றியூரில் மனைவி இறந்த தகவல் அறிந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பன் 86; தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விசாலாட்சி 76. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.இதனிடையே விசாலாட்சி உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மனைவி மீது அதீத பாசம் கொண்ட தங்கப்பன் உடனிருந்து கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விசாலாட்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த தகவல் கணவர் தங்கப்பனிடம் தெரிவிக்கப்பட்டது. சோகத்தில் இருந்தவர் சில மணி நேரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.மகன்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்த தகவலை தெரிவித்தார். மனைவி இறந்த தகவல் அறிந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X