சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் இணைப்பு கேட்டு அலுவலகம் முன் தர்ணா

Added : மே 05, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சி, பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின், 40; இவர், தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு 20 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்காமல்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சி, பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின், 40; இவர், தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு 20 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லெனின், நேற்று மாலை 4:40 மணியளவில் ராமநத்தம் ஊராட்சிஅலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.துணை பி.டி.ஓ., செல்வகுமாரி பேச்சுவார்த்தை நடத்தி, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் லெனின் 5:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X