தி.மு.க.,வினர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : மே 05, 2021
Share
புவனகிரி : புவனகிரியில் தி.மு.க., வெற்றியைக் கொண்டாடிய நகர செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கொண்டாட்டம், ஊர்வலம் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புவனகிரியில் தி.மு.க., வெற்றியைக் கொண்டாடும் விதமாக நகர செயலாளர் கந்தன் தலைமையில் மாவட்ட பிரதிநிதி

புவனகிரி : புவனகிரியில் தி.மு.க., வெற்றியைக் கொண்டாடிய நகர செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கொண்டாட்டம், ஊர்வலம் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புவனகிரியில் தி.மு.க., வெற்றியைக் கொண்டாடும் விதமாக நகர செயலாளர் கந்தன் தலைமையில் மாவட்ட பிரதிநிதி செல்லபாண்டியன், பன்னீர்செல்வம், வீரமணி உட்பட 20 பேர் நேற்று முன்தினம் அண்ணா துரை சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.அதனைத் தொடர்ந்து கந்தன் உட்பட 20 பேர் மீது புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X