பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களை தக்க வைக்க ஹிந்தி வாசகங்களுடன் கூடிய பேனர்கள்

Added : மே 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்பூர்:வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திருப்பூரில் ஹிந்தி வாசகங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் செல்கின்றனர். இதனால் 'ஆர்டர்'களை முடிப்பதில் உற்பத்தியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு
 தொழிலாளர்களை தக்க வைக்க ஹிந்தி வாசகங்களுடன் கூடிய பேனர்கள்

திருப்பூர்:வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திருப்பூரில் ஹிந்தி வாசகங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் செல்கின்றனர்.

இதனால் 'ஆர்டர்'களை முடிப்பதில் உற்பத்தியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 'லகு உத்யோக் பாரதி' சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

'திருப்பூர் உங்களை வரவேற்கிறது' என்ற தலைப்பில் 'உங்கள் வேலையை பாதிக்கும் வகையில் இனி ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை.அரிசி பருப்பு காய்கறி என உணவு பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.'விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். வெளி மாநில தொழிலாளர்களின் தேவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டாம்' என பேனரில் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'லகு உத்யோக் பாரதி' நிர்வாகிகள் கூறுகையில் 'இக்கட்டான சூழலிலும் திருப்பூர் கை கொடுக்கும்; இடம்பெயர்தலை தவிர்த்தால் தொற்றில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க முடியும். தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரிக்காமலும் உற்பத்தி பாதிக்கப்படாமலும் தடுக்க முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-மே-202118:55:04 IST Report Abuse
கல்யாணராமன் சு. சென்ற முறையே, அவர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லையென்றாலும், அவர்களுடைய இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் புலம் பெயர்ந்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை ........ முதலாளிகள், அன்று தங்களுடைய லாப நஷ்ட கணக்கை பார்த்து கொடுக்கப்படவேண்டிய ஆதரவில் சுணங்கியதால்தான், தொழிலாளர்கள் திரும்ப நேர்ந்தது ........ ...
Rate this:
Cancel
05-மே-202110:48:45 IST Report Abuse
ஆரூர் ரங் ஓனர்கள் தமிழர்கள்தான் . திராவிட ஆதரவாளர்கள் தான். ஆனாலும் வேலைவாய்ப்பு என்றால் மட்டும் உள்ளூர் ஆள் வேண்டாமாம் .டாஸ்மாக் 😇தமிழர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு கட்டாயம் என்று சட்டம் கொண்டு வந்தால் மூடிவிட்டு போய் விடுவார்கள்
Rate this:
Cancel
Svs Yaadum oore - chennai,இந்தியா
05-மே-202108:48:09 IST Report Abuse
Svs Yaadum oore //....'திருப்பூர் உங்களை வரவேற்கிறது' ...//.....'திருப்பூர் உங்களை வரவேற்கிறது' என்று வட மாநில தொழிலாளருக்கு ஹிந்தியில் போர்டு வைத்து அவர்களுக்கு இலவச தடுப்பூசி அரிசி பருப்பு காய்கறியாம் ....தமிழ் தமிழன் வடகத்தியன் பனி பூரி என்று கூவினவன் இப்பொது திருப்பூர் போய் கூவுங்கடா .....எங்கடா நாம் தமிழர் ??...திருப்பூர் வந்து கூவுங்கடா .....தன மான தமிழன் சுடலை ஆட்சி இப்போது நடக்குது ....வெட்கம் மானம் கெட்டவனுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X