பொது செய்தி

தமிழ்நாடு

நியமன அலுவலர்களாக டாக்டர்கள்: அவசர அரசாணைக்கு எதிர்ப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
உணவு பாதுகாப்புத் துறையில் டாக்டர்களே மாவட்ட நியமன அலுவலர்களாக பணியில் தொடர பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த 2011ல் உணவுக் கலப்பட தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. புதிதாக தனித்துறையும் உருவாக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கடந்தும் பணி அமைப்பு விதிகள்

உணவு பாதுகாப்புத் துறையில் டாக்டர்களே மாவட்ட நியமன அலுவலர்களாக பணியில் தொடர பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011ல் உணவுக் கலப்பட தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. புதிதாக தனித்துறையும் உருவாக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கடந்தும் பணி அமைப்பு விதிகள் உருவாக்கப்படவில்லை.பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கப் பெறாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இத்துறையில் டாக்டர்களே மாவட்ட நியமன அலுவலர்களாக பணியில் தொடர அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத் தலைவர் முருகேசன் மற்றும் பொதுச் செயலர் அன்பழகன் கூறியதாவது:இத்துறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக பணி புரிபவர்களுக்கு மட்டுமே மாவட்ட நியமன அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட நியமன அலுவலர்களாக உள்ள டாக்டர்களை பொது சுகாதாரத் துறைக்கு மாற்ற வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் டாக்டர்களே மாவட்ட நியமன அலுவலர்களாக பணியில் தொடர அரசாணை பிறப்பித்துள்ளார். அவசரமாக வெளியிடப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X