பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் அ.தி.மு.க.,வை விட தி.மு.க., 10,323 ஓட்டுகள் அதிகம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., 5,27,142 ஓட்டுகளும், அ.தி.மு.க., 5,16,819 ஓட்டுகளும் பெற்றுள்ளன.மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தொகுதியில் 2,19,390 வாக்காளர்கள், விருத்தாசலம் 2,52,844, நெய்வேலி 2,18603, பண்ருட்டி 2,45,451, கடலுார் 2,39,372, குறிஞ்சிப்பாடி 2,43,164, புவனகிரி 2,48,517, சிதம்பரம் 2,50,998, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2,28,956 வாக்காளர்கள் என, மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., 5,27,142 ஓட்டுகளும், அ.தி.மு.க., 5,16,819 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தொகுதியில் 2,19,390 வாக்காளர்கள், விருத்தாசலம் 2,52,844, நெய்வேலி 2,18603, பண்ருட்டி 2,45,451, கடலுார் 2,39,372, குறிஞ்சிப்பாடி 2,43,164, புவனகிரி 2,48,517, சிதம்பரம் 2,50,998, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2,28,956 வாக்காளர்கள் என, மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். 9 தொகுதிகளில் தபால் ஓட்டுகளுடன் சேர்த்து 16 லட்சத்து 66 ஆயிரத்து 465 ஓட்டுகள் பதிவாகின.

மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க., கடலுார், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, திட்டக்குடி தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்., விருத்தாசலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிதம்பரம், வி.சி., காட்டுமன்னார்கோவில், த.வா.க., பண்ருட்டியில் போட்டியிட்டன. பண்ருட்டியில் வேல்முருகன் தி.மு.க., சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டார்.

அ.தி.மு.க., கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., நெய்வேலி, விருத்தாசலம், பா.ஜ., திட்டக்குடி தொகுதியிலும் போட்டியிட்டன.இதில், தி.மு.க., கடலுாரில் 84,563, குறிஞ்சிப்பாடியில் 1,01,681, நெய்வேலியில் 75,177, திட்டக்குடியில் 83,726, பண்ருட்டியில் 93,801, புவனகிரியில் 88,194 என மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 142 ஓட்டுகள் பெற்றுள்ளது.காங்., விருத்தாசலத்தில் 77,064, வி.சி., காட்டுமன்னார்கோவிலில் 86,056, சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75,024 ஓட்டுகள் பெற்றன.

அ.தி.மு.க., சிதம்பரத்தில் 91,961, புவனகிரியில் 96,453, கடலுாரில் 79,412, பண்ருட்டியில் 89,104, குறிஞ்சிப்பாடியில் 84,232, காட்டுமன்னார்கோவிலில் 75,657 ஓட்டுகள் என 5,16,819 ஓட்டுகள் பெற்றன.இதே போன்று பா.ம.க., நெய்வேலியில் 74,200, விருத்தாசலத்தில் 76,202, என, 1,50,402 ஓட்டுகளும்; திட்டக்குடியில் பா.ஜ., 62,163 ஓட்டுகளும் பெற்றது.9 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 74,483, தே.மு.தி.க., 4 தொகுதிகளில் 34,911, அ.ம.மு.க., 5 தொகுதிகளில் 8,832, ச.ம.க., 2 தொகுதிகளில் 6,993, ம.நீ.ம., 3 தொகுதிகளில் 4,830, ஐ.ஜே.கே., 3 தொகுதிகளில் 2,167, ஜனதா தள் ஒரு தொகுதியில் 1,190 ஓட்டுகள் பெற்றன. மாவட்டத்தில் அ.தி.மு.க.,வை விட தி.மு.க., 10,323 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X