சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 7 பேர் பலி

Added : மே 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 7 பேர் இறந்தது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 31,220 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 305 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 31,525 ஆக உயர்ந்தது. 253 பேர் குணமடைந்ததால், இதுவரை 29,188 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தொற்று பாதித்த

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 7 பேர் இறந்தது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 31,220 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 305 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 31,525 ஆக உயர்ந்தது. 253 பேர் குணமடைந்ததால், இதுவரை 29,188 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தொற்று பாதித்த 1,718 பேர் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலும், வெளி மாவட்டங்களில் 283 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். 431 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 329 பேர் இறந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 7 பேர் இறந்தனர்.கடலுார் மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 57 வயது நபர்கள் இருவர். நல்லுாரைச் சேர்ந்த 61 வயது நபர், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 50 வயது நபர், பெண்ணாடத்தைச் சேர்ந்த 49 வயது நபர், சிதம்பரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் மற்றும் 70 வயது முதியவர் என 7 பேர் இறந்ததையடுத்து இறப்பு எண்ணிக்கை 336 ஆக அதிகரித்துள்ளது. 85 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X