உ.பி., உள்ளாட்சி தேர்தல்: சமாஜ்வாதி பெருமிதம்

Added : மே 05, 2021
Share
Advertisement
லக்னோ:''உ.பி., உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், சமாஜ்வாதி கட்சிக்குத்தான், மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது,'' என, அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று ஓட்டு எண்ணிக்கை துவங்கி,

லக்னோ:''உ.பி., உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், சமாஜ்வாதி கட்சிக்குத்தான், மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது,'' என, அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று ஓட்டு எண்ணிக்கை துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில், நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வரை, 918 கிராமப் பஞ்சாயத்துகளில், பா.ஜ., உறுப்பினர்கள் வெற்றி பெற்று, முன்னணியில் உள்ளதாக, அக்கட்சி அறிவித்திருந்தது. பிற கட்சியினர், 557 இடங்களை கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இது, எங்கள் கட்சிக்கே, கிராமப்புற மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

பிரதமர் மோடியின் வாரணாசி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், கோரக்பூர் பார்லி., தொகுதிகளுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், சமாஜ்வாதி வேட்பாளர்கள், பா.ஜ.,வை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அயோத்தி தொகுதியின், 40 கிராம பஞ்சாயத்துகளில், 22 இடங்களை சமாஜ்வாதி கைப்பற்றியுள்ளது. பா.ஜ.,விற்கு எட்டு இடங்களே கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X